
விஜய தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். அவர், சாவித்திரியாக நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய தேவரகொண்டா. இந்நிலையில் புதிய படத்தில்இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதைத் தெலுங்கு இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்குகிறார். எஸ்விசி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் டாக்டர் ராஜசேகர் வில்லனாக நடிக்க இருப் பதாகக் கூறப்படுகிறது.
கிராமத்துப் பின்னணியில் நடக்கும் ஆக் ஷன் கதையான இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. விஜய தேவரகொண்டா இப்போது ராகுல் சாங்கிருதியன் இயக்கும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்ததும் இந்தப் படம் தொடங்க இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகிறது.