
வால்மீகி முனிவர் வேடத்தில், தான் நடிப்பதாக வெளியான வீடியோ போலியானது என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் 3-ம் பாகம், செப்.19-ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வால்மீகி முனிவரின் வாழ்க்கைக் கதை சினிமாவாக இருப்பதாகவும் வால்மீகியாக அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அக்‌ஷய் குமார் வால்மீகி வேடத்தில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.