
மதுரை: தமிழகத்தில் வக்பு வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வக்பு வாரியம் அமைக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த டி.எஸ்.அகமது இப்ராகிம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:
3 மாதம் நீட்டித்து அரசாணை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். இந்தக் காலம் கடந்த 2-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், வக்பு வாரியத்தின் பதவிக் காலத்தை 3 மாதங் கள் நீட்டித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை முதன்மைச் செயலர் 29.8.2025-ல் அரசாணை பிறப்பித்துள்ளார்.