
சென்னை: வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை (செப். 25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மேற்கு வங்கம் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று வலுகுறையக்கூடும்.