• September 23, 2025
  • NewsEditor
  • 0

பூடானிலிருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நடிகர்கள் ப்ரித்விராஜ், துல்கர் சல்மான், மம்மூட்டி வீடுகளில் `ஆபரேஷன் நம்கோர்’ என்ற பெயரில் சுங்கத்துறை சோதனை நடத்தினர்.

இந்த மூவரைத் தாண்டி கேரளாவின் முக்கிய பிரமுகர்களின் இல்லங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் துல்கர் சல்மானின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Dulquer Salman

அவரிடம் கார் வாங்கியதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சுங்கத்துறை கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துல்கர் சல்மானின் தந்தை மம்மூட்டி வீட்டில் மொத்தமாக 10 கார்கள் இருந்துள்ளன. அதில் 8 கார்கள் பழைய மாடல் கார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதைத் தாண்டி, சோதனை நடத்திய கேரளாவின் ஏழு இடங்களிலிருந்து 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வாகனங்கள் கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கள் மீது எப்போதும் துல்கர் சல்மான் பெரும் பிரியம் கொண்டவர். ஃபெராரி, பென்ஸ் என சொகுசு கார்களின் உயர் ரகங்களும் அவருடைய கேரேஜில் இருக்கின்றன.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் என்னென்ன கார் கலெக்ஷன் வைத்திருக்கிறார், எத்தனை வருடங்களாக அந்த கார்களை அவர் வைத்திருக்கிறார் என்ற விவரங்களைப் பார்ப்போமா…

போர்ஷே 911 ஜிடி3 (991.2):

துல்கர் சல்மானிடம் இருக்கும் கலெக்ஷன்களிலேயே இந்த கார் அவருக்கு மிகவும் பிடித்தமானது எனச் சொல்லலாம்.

இந்த கார் குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முறை பதிவிட்டிருந்த அவர், “இந்த கார்தான் என்னுடைய ஷெட்களில் இருக்கும் கூர்மையான டூல்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

மெர்சிடெஸ் பென்ஸ் எஸ்.எல்.எஸ். ஏ.எம்.ஜி:

இந்த பென்ஸ் கார் துல்கர் சல்மானிடம் எட்டு வருடங்களாக இருக்கிறது.

வெள்ளை நிறத்திலான இந்த சொகுசு காரை ஃப்யூசர் கிளாசிக் என்று அழைக்கிறார் துல்கர் சல்மான்.

பி.எம்.டபிள்யூ எம்3 இ46:

இந்த மாடலின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால், இதனைப் பொக்கிஷமாக துல்கர் சல்மான் தன்னுடைய ஷெட்டில் பாதுகாத்து வருகிறார்.

பயன்படுத்தப்பட்ட இந்த கார் தற்போது 50 லட்சத்திற்குக் கிடைக்கிறது.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

இதைத் தாண்டி, இன்னோவா, ஃபெராரி 296 ஜிடிபி, போர்ஷே பனமேரா, மெர்சிடெஸ் மேபேக் ஜி.எல்.எஸ். 600, மெர்சிடெஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், மெர்சிடெஸ் ஏ.எம்.ஜி. ஜி63, மெர்சிடெஸ்-ஏ.எம்.ஜி. ஏ45, பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் டிஃபென்டர், வி.டபிள்யூ. போலோ ஜி.டி.ஐ, மினி கூப்பர் எஸ், மாஸ்டா எம்.எக்ஸ்-5 போன்ற கார்களை துல்கர் வைத்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *