
சென்னை: மக்களின் அடிப்படை உரிமையான, நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்று, அமைச்சரிடம் சமர்ப்பித்து, நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கேட்டுக்கொண்டது.