
குன்னூர்: திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்ததே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று திமுக எம்பி கனிமொழிக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்ப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று குன்னூர், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களைச் சந்தித்தார். குன்னூர் பேருந்து நிலையம் அருகே மவுன்ட் ரோட்டில் கூடியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் ஆற்றிய உரை: