
பாலிவுட் நட்சத்திர ஜோடியான விக்கி கௌஷல் – கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் கோலாகலமாக இந்த பாலிவுட் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் கத்ரீனா கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி வேகமாகப் பரவிவந்தது. கத்ரீனா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.
அந்தப் புகைப்படத்தில் கத்ரீனா கர்ப்பமாக இருக்கிறாரா? பேபி பம்ப் புகைப்படங்கள் உண்மையா அல்லது விளம்பரத்திற்கான படப்பிடிப்பா என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் விக்கி கௌஷல் – கத்ரீனா கைஃப் தங்களது கர்ப்பம் குறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளனர்.
அந்தப் பதிவில் ”மகிழ்ச்சியும் நன்றியும் நிறைந்த இதயங்களுடன் எங்களது வாழ்வில் சிறந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறோம்” என்று, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதற்கு ரகுல் ப்ரீத் சிங் உட்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.