
ரஜினி நடித்த ‘மனிதன்’ படத்தினை அக்டோபர் 10-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான படம் ‘மனிதன்’. இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி பெரும் வசூல் சாதனை புரிந்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, சோ, வினுசக்கரவர்த்தி, ரூபிணி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.