
லக்னோ: போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதாக கூறி ஒரு கும்பல் ரூ.5 கோடி நிதி திரட்டியுள்ளது. ஆனால் இந்தப் பணத்தை சொந்தப் பயன்பாட்டுக்கு மடை மாற்றியுள்ளது. இந்தப் பணம் தேசவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பிவாண்டியில் 3 பேரை உ.பி. காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்டியார், அபு சுபியான் என்ற இந்த மூவரும் 22 வயதுடையவர்கள். பிவாண்டியில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.