• September 23, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்​சித் தலை​வர் லாலு பிர​சாத் யாத​வின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்​போது கட்​சி​யின் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். இந்​நிலை​யில் தந்தை லாலு, சகோ​தரர் தேஜஸ்வி உள்​ளிட்​ட​வர்​களு​டன், ரோஹிணி ஆச்​சார்​யா​வுக்கு கருத்து வேறு​பாடு என்ற ரீதி​யில் கடந்த சில நாட்​களாக செய்​தி​கள் வந்த வண்​ணம் உள்​ளன.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் ரோஹிணி கூறியதாவது: எனக்கு எந்​த​வித அரசி​யல் லட்​சி​யங்​களும் இல்​லை. அதே​போல் மாநிலங்​களவை எம்​.பி. பதவி​யிலோ அல்​லது எம்​எல்ஏ பதவி​யிலோ எனக்கு விருப்​பம் இல்​லை. அதே​போல் என்​னைச் சார்ந்​தவர்​களுக்​காக நான் யாரிட​மும் சீட் கேட்டு செல்​ல​வில்​லை. என்​னைப் பற்றி கடந்த சில நாட்​களாக தவறான செய்​தி​கள் வரு​கின்​றன. இதில் எது​வும் உண்மை இல்​லை. இவ்​வாறு அவர் கூறி​யுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *