• September 23, 2025
  • NewsEditor
  • 0

இடாநகர்: அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடை​பெற்ற நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.5,100 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். குறிப்​பாக அருணாச்சல பிரதேசத்​தில் இரு நீர் மின் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் அருணாச்சல பிரதேசத்​தின் தவாங்​கில் 9,820 அடி உயரத்​தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்​க​வும் அவர் அடிக்​கல் நாட்டினார்.

விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: நாட்​டில் முதல் சூரியோத​யம் அருணாச்சல பிரதேசத்​தில் தொடங்​கு​கிறது. ஆனால் காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மாநில மக்​களின் வாழ்க்​கை​யில் விடியல் பிறக்​க​வில்​லை. கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதம​ராக பதவி​யேற்​றது முதல் வடகிழக்கு மாநிலங்​களுக்கு முன்​னுரிமை அளித்து வரு​கிறேன். இதன்​காரண​மாக ஒட்​டு மொத்த வடகிழக்​கும் அபரித​மாக வளர்ச்சி அடைந்​திருக்​கிறது. என்னை பொறுத்​தவரை மக்​களே கடவுள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *