
சூப்பர் ஹீரோ கதையாக உருவாகும் ‘அதிரா’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ‘ஆர்ஆர்ஆர்’, பவன் கல்யாண் நடித்து வெளிவர இருக்கும் ‘ஓஜி’ உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள டிவிவி தனய்யாவின் மகன் கல்யாண் தாசரி, இந்தப் படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார்.
தெலுங்கில் உருவாகும் இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘ஹனுமன்’ படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா, இதன் கதையை உருவாக்கியுள்ளார். பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாக உருவாகும் இதை, ஷரண் கோப்பிஷெட்டி இயக்குகிறார். சிவேந்திரா, ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ சரண் பகலா இசை அமைக்கிறார்.