
புதுடெல்லி: மாநில அரசுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 16 மாநிலங்களின் வருவாய் உபரியாக உள்ளது. இதற்கு முன்பு பற்றாக்குறை மாநிலங்கள் பட்டியலில் இருந்த உத்தர பிரதேசம் இப்போது உபரி வருவாய் மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் உத்தர பிரதேசத்தின் உபரி வருவாய் ரூ.37 ஆயிரம் கோடியாக இருந்தது.
இந்தப் பட்டியலில் குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கர்நாடகா (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கர் (ரூ.8,592 கோடி), தெலங்கானா (ரூ.5,944 கோடி), உத்தராகண்ட் (ரூ.5,310 கோடி), கோவா(ரூ. 2,399 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.