
புதுடெல்லி: அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, 2007-09 காலகட்டத்தில் வருமானத்துக்குஅதிகமாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.