
இன்டிகோ விமானத்தின் மீது சமீபகாலமாக நிறைய கேளாறுகள் ஏற்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
கடந்த ஜூன் மாதம்கூட பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இன்டிகோ விமானி ஒருவர் 3 உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சமீபத்தில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “ஏ.சி அதிகம் இல்லாத இந்த விமானங்களில் பயணிக்கும் பிசினஸ் பயணிகள் F11 ரேசர்கள் போல, வெப்பம் மற்றும் வியர்வை மிகுந்த பயணத்தில் ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ குறைகிறார்கள்.
IndiGO: “பறக்கத் தகுதியில்லை; செருப்பு தைக்க போ…” – குற்றச்சாட்டுக்கு நிறுவனத்தின் பதில் என்ன?
தமிழ்நாட்டிற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைக்கும் விமானங்கள் சிறிய ATR விமானங்களாக இருப்பது குறித்தும், பெரிய 320 விமானங்களாக இல்லாதது குறித்தும் பல தொழிலதிபர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்குப் பெரிய விமானங்களை அறிமுகப்படுத்தாமல், புதிய, நவீன விமான நிலையங்களை அறிமுகப்படுத்துவதில் என்ன பயன்?
ஒன்றிய அரசும், இண்டிகோ நிறுவனமும் அதிக கட்டணங்களை வசூலிக்கும்போது, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.” என்று புகார் தெரிவித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தற்போது, இன்டிகோ விமானத்தின் கோளாறு குறித்தும் AC பயன்படுத்தாமல் பயணிகளை தவிக்கவிட்டது குறித்தும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “இன்டிகோ indiGo6E, கேளாறுகளை சரிசெய்யும் உங்கள் பாதுகாப்பு அக்கறையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் குறைந்தபட்சம் பயணிகளை வசதியாக வையுங்கள். விமானம் மூச்சு முட்டும் அளவுக்கு ஏசி இல்லாமல் இருந்ததால் (உங்கள் ஏடிஆர் விமானத்தின் ஏசி தரையில் இருக்கும்போது வேலை செய்வதே இல்லை) தாய்மார்களும் வயதானவர்களும் மிகவும் விரக்தியடைந்துள்ளனர்.
Dear @IndiGo6E we understand that your concern for safety but atleast make passengers comfortable !!! Mothers and old people are frustrated cos the flight was suffocating (since your ATR's AC NEVER Works on ground) and now your bus is even more Terrible. Passengers have been… pic.twitter.com/rW1wZEADNA
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 22, 2025
இப்போது உங்கள் விமானம் அதைவிடவும் மோசமாக உள்ளது. பயணிகள் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்து மீண்டும் ஏசி இல்லாமல் மூச்சு முட்ட இருந்தனர்… பேருந்தைக் குளிர்விக்க முயற்சிப்பதற்காக ஓட்டுநர் இப்போது நிழலில் நிறுத்தியுள்ளார்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தொடர்ந்து இன்டிகோ விமான சேவை குறித்து புகாரளித்து வருகிறார். தற்போது இந்தப் பதிவும் சமூகவலைதளங்களில் வைரலாகி பலரும் இன்டிகோவின் சேவை குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs