
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது என்று ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. குற்றச்சாட்டின் முகமாக ராகுல்காந்தி இருந்தாலும் இந்த டேட்டாக்களையையெல்லாம் திரட்டியதன் பின்னணியில் ஒரு தமிழர் இருக்கிறார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் சென்னையைச் சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி. காங்கிரஸ் டேட்டா பிரிவின் தலைவராக இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தி, வாக்கு திருட்டு குறித்து விகடனுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது.