• September 22, 2025
  • NewsEditor
  • 0

கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.20) அன்று திமுகவின் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இக்கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

திருச்சி சிவா

இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்.பி திருச்சி சிவா மேடையில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது செந்தில் பாலாஜி தாமதமாக மேடைக்கு ஏறி வந்தப்போது பொதுமக்கள் அனைவரும் செந்தில் பாலாஜியை பார்த்திருக்கின்றனர். மேலும் மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக எழுந்திருக்கின்றனர்.

அந்த சமயத்தில் திருச்சி சிவா பேசுவதை நிறுத்தி விட்டு கோபமடைந்திருக்கிறார். “யோவ் யாரா இருந்தா என்ன ? இங்க பாரு. அவர் பாட்டுக்குத் தான் வராரு, நீங்க ஏன் அங்க பாக்குறீங்க, நான் அடி வயிற்றிலிருந்து பேசிட்டு இருக்கேன்” என கோபமாகப் பேசியிருக்கிறார்.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அதன் பிறகு மேடைக்கு வந்த செந்தில் பாலாஜி திருச்சி சிவாவிற்கு சால்வை அணிவித்த பிறகு திருச்சி சிவாவிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். தற்போது திருச்சி சிவா கோபமாகப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சி சிவா கோபம் – என்ன நடந்தது?

Q1: இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது?
A1: கரூர் மாவட்டத்தில், செப்டம்பர் 20 (சனிக்கிழமை) நடைபெற்ற திமுகவின் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது.

Q2: அந்த பொதுக்கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள்?
A2: கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக எம்.பி. திருச்சி சிவா மேடையில் இருந்தார்.

Q3: எதனால் திருச்சி சிவா கோபமடைந்தார்?
A3: திருச்சி சிவா பேசிக்கொண்டிருந்தபோது, தாமதமாக மேடைக்கு வந்த செந்தில் பாலாஜியை மக்கள் பார்த்ததால், தன்னுடைய பேச்சில் யாரும் கவனம் செலுத்தவில்லை என்பதற்காக அவர் கோபமடைந்தார்.

Q4: திருச்சி சிவா அப்போது என்ன கூறினார்?
A4: பேசுவதை நிறுத்தி விட்டு, அவர் கோபமாக: “யோவ் யாரா இருந்தா என்ன? இங்க பாரு. அவர் பாட்டுக்குத் தான் வராரு, நீங்க ஏன் அங்க பாக்குறீங்க, நான் அடி வயிற்றிலிருந்து பேசிட்டு இருக்கேன்” என்று கண்டனம் தெரிவித்தார்.

Q5: இந்த சம்பவம் எப்படி பரவியது?
A5: திருச்சி சிவா கோபமாக பேசிய வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டதும், அது வைரலாக பரவி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *