• September 22, 2025
  • NewsEditor
  • 0

சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்ராஜ் (நட்டி), அருண் பாண்டியன் இணைந்து, முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘ரைட்’.

நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் நடித்திருக்கிறார். வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா பார்கவி கல்லூரி மாணவியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

‘பிக் பாஸ்’ அக்‌ஷரா ரெட்டி, வினோதினி உள்ளிட்ட சிலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

‘ரைட்’

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் செப்டம்பர் 26 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்.21) சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இதில் பேசிய நடிகர் நட்டி, “இது ஒரு சுவாரஸ்யமான படம்.

இதன் இயக்குநர் ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர். அவர் கதை சொன்ன போதே யார், யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதியே வைத்திருந்தார்.

அருண் பாண்டியன் சார், ஒரு கோ டைரக்டர் போல இதில் வேலை செய்தார். சமூக அக்கறை மிக்க ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லி இருக்கிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து அவரிடம், ‘பாலிவுட்டில் உங்களை கேமரா மேனாகப் பணியாற்றுவதற்குத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் நடிப்பதை முக்கியமாகக் கருதி தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். பாலிவுட்டில் மீண்டும் பெரிய படங்களில் கேமரா மேனாகப் பணியாற்ற அழைத்தால் நீங்கள் செல்வீர்களா? என்று செய்தியாளர் கேள்வியை எழுப்பி இருந்தார்.

நட்ராஜ் (நட்டி)
நட்ராஜ் (நட்டி)

அதற்குப் பதிலளித்த நட்டி, ” நல்ல கதை, பெரிய நடிகர்கள் இருந்தால் நிச்சயமாகப் பணியாற்றுவேன். கேட்கிற எக்கியூப்மென்ட் எல்லாம் அங்குத் தருவார்கள். என்னுடைய தொழிலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைக்கும். இப்போதும் கூட எதாவது இடைவேளை கிடைத்தால் அங்குச் சென்று பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறேன்.

ஒளிப்பதிவாளராக ‘Feature film’-களில் மட்டும் பணியாற்றுவதைத் தவிர்த்து வருகிறேன். காரணம் ‘Feature film’களில் பணியாற்றக் குறைந்தது ஒன்றரை வருடமாவது நேரம் ஒதுக்க வேண்டும். அதனால் தவிர்த்து வருகிறேன்.

அதேபோல சில கதைகள் சரியாக வருமா என்று சந்தேகம் இருந்தது. அதனால் கேமரா மேனாகப் பணியாற்றுவதை பாலிவுட்டில் சில படங்களில் தவிர்த்து இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *