• September 22, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​துப் பேசினார். பழனி​சாமி பிரச்​சா​ரத்​தின்​போது வரும் கூட்​டம், நிச்​ச​யம் வாக்கு களாக மாறும் என்று அவர்தெரி​வித்​தார்.

சேலத்​தில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வந்த பாஜக மேலிடப் பார்​வை​யாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோர், நெடுஞ்​சாலை நகரில் உள்ள பழனி​சாமி வீட்​டுக்​குச் சென்​று, ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக ஆலோசனை நடத்தினர். பின்​னர் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிரதமர் மோடி​யின் 75-வது பிறந்​த​நாளை​யொட்டி நாடு முழு​வதும் 75 இடங்​களில் மினி மாரத்​தான் போட்டி நடத்​தப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *