
மதுரை: போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யவில்லை. பல சந்தர்ப்பங்களில் குற்றவாளி குடும்ப உறுப்பினராகவோ அல்லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்பதால் புகார் அளிக்க தயங்குகின்றனர் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்தவர் நீலகண்டன்.
ஒரு பெண் மற்றும் அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீலகண்டன் மனு தாக்கல் செய்தார். அதில், "உரிமையியல் பிரச்சினையில் என் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இரு வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.