
69-வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை காமாராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தொடங்கி தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
சமீபத்தில் மறைந்த திரைக் கலைஞர்களுக்கு இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேல் யூட்யூபர்கள் தொடர்பாகப் பேசிய விஷயம் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.
வடிவேலு பேசியது குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், “விமர்சனங்கள் வரலாம். அதுதான் கலைஞனை உயர்த்தும்.
ஆனால், அது அறிவு ரீதியாக அந்தத் துறையைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் பேசினால், நாங்கள் வளர்வதற்கும் நன்றாக இருக்கும்.
இன்று விமர்சிக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன. விமர்சனம் செய்யுங்கள், ஆனால் அதை அறிவு ரீதியாகச் செய்யுங்கள்.
ஆனால், ஒரு நடிகரின் சொந்த வாழ்க்கைகளுக்குள் சென்று விமர்சிப்பது எங்களுக்கும் உதவாது.” என்றவரைத் தொடர்ந்து பூச்சி முருகன், “வடிவேல் சொன்னது ஒரு பக்கம் நியாயமாக இருந்தாலும் அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம்.
நடிகர்கள் பற்றி தவறாகப் பேசினால் சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் புகார் தருகிறோம். தமிழக அரசும் அதை கவனித்து நடவடிக்கைகளை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.” என்றார்.

வடிவேலு பேசியது குறித்து விஷால் பேசுகையில், “வடிவேல் அண்ணன் சில நடிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்ப்பவர்தான் அடுத்ததாக இன்னொரு காணொளியையும் போடுகிறார். அவரை திருத்த முடியாது. அவர் எங்களை வைத்து சம்பாதிக்கிறார். நாங்கள் சுயமாக சம்பாதிக்கிறோம்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…