
திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் வசூலில் பெரிய மேஜிக்கை நிகழ்த்தியது.
‘லியோ’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.
திரையரங்குகளில் பெரும் வசூலை அள்ளியதைத் தொடர்ந்து இப்போதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தைத் தன்னுடைய வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். படத்திற்குக் கிடைத்த லாபம் மொத்த படக்குழுவினருக்கும் பகிரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இப்படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இந்த யூனிவர்ஸைப் பெரிதாக்கும் திட்டத்தையும் ரிலீஸுக்கு முன்பே துல்கர் சல்மான் வைத்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகமாகியிருக்கிறது.
திரைப்படம் கூடிய விரைவில் OTT தளத்தில் வெளியாகவிருப்பதாகத் தகவல்கள் இணையத்தில் பேசப்பட்டது. அந்தத் தகவலை மறுத்து துல்கர் சல்மான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “லோகா திரைப்படம் இப்போது OTT தளத்தில் வெளியாகவில்லை. போலி செய்திகளைப் புறக்கணிக்கவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருங்கள்!” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…