
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரி குறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை நாட்டு மக்கள் நாளை (செப்.22) முதல் பெறலாம். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.