
என் ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள் என்று ‘இட்லி கடை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசினார்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தனுஷும் கலந்து கொண்டார். இதில் அனைவருமே தனுஷின் இயக்கத்தைப் பற்றி பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள்.