
‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் படம், ‘தீயவர் குலை நடுங்க’.
ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்துள்ளார். தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீஸரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.