
பெங்களூரு: க‌ர்நாடகாவில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை எழுந்தது. அமைச்சரவையிலும் எதிர்ப்பு எழுந்ததால் அதனை ரத்து செய்திருக்கிறோம். மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலையை கண்டறிய‌ மீண்டும் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.