
சென்னை: நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்களின் கல்விமுறையை பின்பற்றுவது வேதனை அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை ஐஐடி, ‘திங்க் இந்தியா’ அமைப்பு சார்பில்‘தேசிய மறுமலர்ச்சிக்கான தொழில்முனைவு மற்றும் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பிலான 2 நாள் மாநாடு (தக்‌ஷினபதா 2025) நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சுதந்திரம் அடைந்தபோது உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்தோம். பிறகு படிப்படியாக பின்தங்கி 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டோம். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனதும் புதிய இந்தியா பிறந்தது. தற்போது உலகப் பொருளாதாரத்தில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். வறுமை, வன்முறை குறைந்துள்ளது.