
சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியைப் படித்ததும் மனதில் எழுந்த முதல் கேள்வியே கடந்த 5 நாட்களில் வெளியே தெரிய வந்த வன்கொடுமைகள் 17 எனில், வெளியே சொல்ல பயந்து மறைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனை?