
மயிலாடுதுறை: முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும். வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பதிவு செய்யப்பட்ட 400 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மமக 2009 முதல் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் செய்யும் முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறார். அதை திசை திருப்பவே பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.