
புதுடெல்லி: “பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அனுப்பும் பரிசுகளால் இந்திய மக்கள் வேதனையடைந்துள்ளனர்” என்று எச்1பி விசா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு, பெறப்படும் பரிசுகளால் இந்தியர்கள் பெரும்பாலும் வேதனையடைந்துள்ளனர். உங்கள் 'ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்' அரசிடம் இருந்து வரும் பிறந்தநாள் பரிசுகள் இதுதான்… எச்1பி விசாக்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை மிகவும் பாதிக்கக் கூடியது. ஏனெனில் எச்1பி விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.