
புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் பல லட்சம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். "அதிகாலை 4 மணிக்கு 36 வினாடிகளில் 2 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் விழித்திருந்து இதை பார்த்தாலும் திருடர்களை பாதுகாக்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தனது தலைமை தோல்வி அடைந்ததை ராகுல் ஏற்க வேண்டியிருந்தது. அவரது தலைமை பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இட்டுச் சென்றது.