• September 20, 2025
  • NewsEditor
  • 0

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.

இப்படத்தில் விஜயகாந்த்தின் தீவிர ரசிகராக வரும் கெத்து தினேஷ், அவரது எண்ட்ரிக்கு ஒலிக்கும் விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைதளம் எங்கும் வைரலாகி, எங்கு திரும்பினாலும் இப்பாடலை முணுமுணுத்தபடியே இருந்தனர். நல்ல கருத்தோடு, நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியிருந்ததற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருந்தது.

லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தனுஷ்

`நீ பொட்டு வச்ச தங்கக்குடம்!’ – `லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

தமிழரசன் பச்சமுத்து முதல் படத்திலேயே முத்திரை பதித்து பாராட்டுகளைக் குவித்தார். இதையடுத்து தனுஷ் ̀லப்பர் பந்து’ படத்தின் இயக்குநரான தமிழரசன் பச்சமுத்துவுடன் இணைந்து ஒரு படம் பண்ணுகிறார் எனப் பேசப்பட்டது. இத்திரைப்படத்தையும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக ̀லப்பர் பந்து’ வெளியாகி ஓராண்டை நிறைவு செய்திருப்பதை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, “நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா?? Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா??

இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய நம்பிக்கையற்ற மனதின் மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20ம்தேதி ‘லப்பர் பந்து’ ரிலீஸ் ஆச்சு!

`நீ பொட்டு வச்ச தங்கக்குடம்!’ – `லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

என்னோட அடுத்தப் படம் தனுஷ் சார் கூடதான்

முதல் காட்சி முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க. இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும். மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு ரொம்ப நன்றி நீங்க கொடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் இப்டி என்ன ஊக்கம் கொடுத்த இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த அப்டெட்ட நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்! ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்..

தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி கதை சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு. நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *