
செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது என்று ‘பல்டி’ பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தனு குறிப்பிட்டார்.
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு, ப்ரீத்தி, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பல்டி’. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.