• September 20, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி அக்​டோபர் 6-ம் தேதி தொடங்க உள்​ளது. அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை மேற்​கொள்ள தேர்​தல் ஆணை​யம் முடிவு செய்​துள்​ளது.

இதற்​காக தலைநகர் கொல்​கத்​தா​வில் தேர்​தல் அலு​வலர்​களுக்​கான சிறப்பு முகாம் அண்​மை​யில் நடை​பெற்​றது. மாநில தலைமை தேர்​தல் அதி​காரி மனோஜ் அகர்​வால் தலை​மை​யில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்​சி​யர்​கள், மூத்த அரசி​யல் அதி​காரி​கள் பங்​கேற்​றனர். அப்​போது வரும் அக்​டோபர் 6-ம் தேதி வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை தொடங்க முடிவு செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *