
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார். காலை 10 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார் விஜய்.
விஜய்யின் பரப்புரைக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. தவெக தலைவரின் பரப்புரை 11 மணி அளவில் தொடங்கும், 30 நிமிடங்களுக்குள் உரை முடிக்கத் திட்டம், வாகனங்களை அனுமதி இல்லாமல் பின்தொடரக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சாலைகளில் பேனர்கள் வைக்கக் கூடாது எனவும் பரப்புரைக் கூட்டத்திற்கு வருவோர் கையில் கம்பு உள்ளிட்ட எந்த ஆயுதங்களும் வைத்திருக்கக் கூடாது எனவும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பரப்புரை மேற்கொள்ளப்படும் இடத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதால் பரப்புரை நேரத்தில் மின்நிறுத்தம் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகையைத் தொடர்ந்து திருவாரூரிலும் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அங்கு பரப்புரை பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!