
மதுரை: மதுரை தவெக மாநாட்டின்போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்சம் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏஆர்.ஜெயருத்ரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் கப்பலூர் முதல் உத்தங்குடி வரையிலான 31.2 கிலோமீட்டர் தொலைவு சாலை வழியாக, தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்கின்றன.