• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திரைப்பட நடிகர் ரோபோ சங்​கர் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்ளிட்ட கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்​வர் உதயநிதி மாலை அணிவித்து அஞ்​சலி செலுத்​தி​னார். பிரபல நகைச்​சுவை நடிகர் ரோபோ சங்​கர், படப்​பிடிப்​பில் இருந்​த​போது மயங்கி விழுந்​தார்.

அதைத்​தொடர்ந்​து, பெருங்​குடி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்​தினம் இரவு கால​மா​னார். இதையடுத்து அவரது உடல், வளசர​வாக்​கத்​தில் உள்ள இல்​லத்​துக்கு கொண்டு வரப்​பட்​டது. அங்கு நள்​ளிரவு முதல், அரசி​யல் தலை​வர்​களும், திரை பிரபலங்​களும் திரண்டு வந்து அஞ்​சலி செலுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *