
சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்சைகள் குறித்து அனைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் மருத்துவர் ராகவ் லங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் நோய் தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.