
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 செப்டம்பர் 18,19 தேதிகளில் கோவில்பட்டியில் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.