
புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபுதாபியில் நேற்று இந்திய, யுஏஇ உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகள் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது.
இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா இடையே இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன.