• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளா​விய நிலைத்​தன்​மைக்​காக​வும் பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் இந்​தியா ஆய்வு செய்​யும் என வெளி​யுறவுத்​துறை தெரி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. அதில் பாகிஸ்​தான் அல்​லது சவுதி அரேபியா மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால், அது இரு நாடு​களுக்கு எதி​ரான தாக்​குதலாக கருதப்​படும்’’ என சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்​மான் அப்​துலாசிஸ் மற்​றும் பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்​டாக அளித்த பேட்டியில் தெரி​வித்​தனர். பாகிஸ்​தான் மீது இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதல் நடத்​திய 4 மாதங்​களுக்​குப்​பின் இந்த ஒப்பந்தம் பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே கையெழுத்​தாகி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *