
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு, சேவா பக்வதா என்ற பெயரில் 75 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை (15 நாள்) நடைபெறவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் 17 திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்தபடியாக, டெல்லியின் சென்ட்ரல் ரிட்ஜ் பகுதியில் 75 நாடுகளின் தூதரக அதிகாரிகள் நேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.