
நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். கடந்த 2023-ம் ஆண்டு இவருக்கு மஞ்சக்காமாலை நோய் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இவருடைய உடல் எடை பெருமளவு குறைந்தது. இந்நிலையில் உடல்நலக் குறைவால் நேற்று காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி தனுஷின் ‘மாரி’, விஜய்யின் ‘புலி’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் திரையுலகில் பிரபலமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர்.
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.— Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2025
Robo Shankar: உடல்நலக் குறைவால் காலமானார் ரோபோ சங்கர்
ரோபோ சங்கரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.” என்று கவிதையை அஞ்சலி செலுத்தி ரோபோ சங்கரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs