
கரூர்- திருச்சி புறவழி சாலையில் உள்ள கோடங்கிப்பட்டி பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. 50 ஏக்கர் பரப்பளவில் இந்த விழாவுக்கான ஏற்பாட்டை சிறப்பாக செந்தில் பாலாஜி செய்திருந்தார். ஆனால், விழா ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மழை ஆரம்பிக்க, பலரும் பேச இருந்த நிலையில் முதல்வர் பேசினார்.
“தி.மு.க என்னும் இயக்கத்திற்கு ஓயாமல் உழைக்கும் உதயசூரியன் ஆகிய தொண்டர்களை பார்க்கும் பொழுது எனக்கு தனி உற்சாகம் வந்துவிடும். நான் திமுக-வின் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு நீங்களே காரணம். இன்று நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் திராவிட மாடல் அரசை ஆட்சியில் அமர்த்தி என்னை முதலமைச்சராக உயர்த்தியதும் நீங்கள் தான். முப்பெரும் விழா என்பது அறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், தி.மு.க என்னும் இயக்கம் உருவான நாள் ஆகிய மூன்றையும் முப்பெரும் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். இந்த விழாவானது, நாம் வெற்றி பெற்று வந்த கரடு முரடான பாதைகளை திரும்பிப் பார்க்கவும், அடுத்து பெறப்போகும் வெற்றிக்காகவும் கூடி இருக்கிறோம்.
தி.மு.க வரலாற்றில் இப்படி ஒரு முப்பெரும் விழா இதுவரை நடந்ததில்லை. இதற்குக் காரணம் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி தான். அவரை அடக்கி ஒடுக்கி தி.மு.க இயக்கத்தை முடக்கி விடலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டார்கள். 2019 -ம் ஆண்டு முதல் திமுக தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. இந்த வெற்றிப் பயணம் 2026-லும் நிச்சயம் தொடரும். கழகத்திற்காக தொண்டர்கள், தொண்டர்களுக்காக கழகம் என்று தி.மு.க இயங்குகிறது. இதை எந்த கொம்பானலும் அழிக்க முடியாது.

தி.மு.க வரலாற்றில் இப்படி ஒரு முப்பெரும் விழா இதுவரை நடந்ததில்லை. இதற்குக் காரணம் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி தான். அவரை அடக்கி ஒடுக்கி தி.மு.க இயக்கத்தை முடக்கி விடலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டார்கள். 2019 -ம் ஆண்டு முதல் திமுக தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. இந்த வெற்றிப் பயணம் 2026-லும் நிச்சயம் தொடரும். கழகத்திற்காக தொண்டர்கள், தொண்டர்களுக்காக கழகம் என்று தி.மு.க இயங்குகிறது. இதை எந்த கொம்பானலும் அழிக்க முடியாது.
அதற்காகத்தான் `ஓர் அணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை முன்னெடுத்து, கிராமம்தோறும் சென்று ஒரு கோடிக்கும் அதிகமான புதிய உறுப்பினர்களை தி.மு.க-வில் இணைத்துள்ளோம். தமிழ்நாட்டுக்கு இடையூறு செய்யும் கொள்கை எது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அது, காவி கொள்கைதான். 2000 ஆண்டுகளாக காவி கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடி வருகிறது. அந்த காவிக் கொள்கைதான் இன்றைய ஒன்றிய பா.ஜ.க அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி என்ன கூறியிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும்.

மறைந்த அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க தான் என்ற உண்மையை பேசி இருக்கிறார். அந்த கைப்பாவை அ.தி.மு.க அரசை வீழ்த்தியது தி.மு.க தான் என்ற வன்ம வார்த்தைகளை பா.ஜ.க கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து, தமிழக அரசை, தி.மு.க-வை மிரட்டி வருகிறது பா.ஜ.க. அந்த மிரட்டலை கண்டு நாம் பயப்பட போவதில்லை.
இந்தியாவிலே ஒரு மாநிலக் கட்சி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது என வரலாற்றை படைத்தது தி.மு.க தான். அதன் பிறகு வந்த தி.மு.க-வில் உதயமான கட்சிகள் தி.மு.க-வை அழிப்போம் என பிரசாரம் செய்தார்கள். ஏன் இப்பொழுதும் கூட சில பேர் பேசி வருகிறார்கள். தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள்தான் என பேசி வருகிறார்கள். எதை மாற்றப் போகிறார்கள்… தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை மாற்றி அமைத்து பின்னோக்கி கொண்டு செல்ல பார்க்கிறார்களா? தி.மு.க-வை விட சிறந்த கொள்கை புதிதாக உதயமான கட்சியிடம் உள்ளதா?.

மாற்றம் என்று பேசி கட்சி துவங்கியவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். ஆனால், தி.மு.க என்ற கட்சி இன்னும் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை. எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இதனால்தான், திராவிட மாடல் அரசை பார்த்தால் வயிற்றெரிச்சல் வருகிறது. மக்களைப் பார்த்து, அவர்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்டை பார்த்து, ஓநாய் வடிக்கும் கண்ணீர். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு தற்போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பு இல்லாமல் தமிழக முதலமைச்சராகிய என்னை ஒருமையில் பேசி வருகிறார்.
ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-விடம் அடகு வைத்து விட்டார். திராவிடம் என்றால் என்னவென்று தனக்குத் தெரியாது என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்று அ.தி.மு.க-வின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அமித் ஷாவே சரணம் என சரண்டர் ஆகிவிட்டார். டெல்லியில் கார் மாறி சென்ற பழனிசாமியை பார்த்து, முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று கூறுவார்கள். அது போல காலிலே விழுந்து விட்டு கர்ச்சீப் வைத்து மறைப்பது எதற்கு என்று விமர்சிக்கிறார்கள்.

தமிழர்களை என்றும் தலை குனிய வைக்க விடமாட்டோம். தமிழகத்தில் புதிய கட்சிகள் வரும். புதிய தலைவர்கள் வருவார்கள். ஆனால், தமிழகத்திற்கு உள்ள பெருமை என்றும் மாறாது. தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து காக்கப்பட வேண்டும். தமிழ் மண்ணை காக்கக்கூடிய பொறுப்பு தி.மு.க-வுக்கு தான். இந்தி திணிப்பை பா.ஜ.க ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். உலகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிதி உதவியை ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்தியது, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தின் வாக்குரிமையை மாற்றி அமைக்க பாஜக அரசு முயல்கிறது.

அந்நாளும் சரி இந்நாளும் சரி பா.ஜ.க ஒன்றிய அரசின் அடக்குமுறைக்கு நோ என்ட்ரி தான். ஆதிக்கத்திற்கு என்றுமே தமிழகத்தில் நே என்ட்ரி என்றுதான். தமிழ்நாடு என்பது கலைஞரும் அண்ணாவும் செதுக்கியது. பா.ஜ.க தமிழகத்தில் நுழையாதவாறு நாம் தடுத்து நிறுத்த வேண்டும். நம் உரிமைகள் பறிபோக நீங்கள் அனுமதிக்க கூடாது.

இந்தி திணிப்பு வந்த போது எப்படி தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தி நம் தமிழ் மொழியை காப்பாற்றினோமோ, உரிமைகளை காப்பாற்றிட நாம் அனைவரும், இணைந்து போராட வேண்டும். இந்தப் போராட்டத்தில் முன் கள வீரனாக நான் இருக்கின்றேன். 23 வயதில் எப்படி மிசா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றேனோ, அதே போராட்ட குணத்தோடு நான் உங்களோடு இருக்கின்றேன். எட்டு கோடி மக்களின் ஆதரவு நமக்கு உள்ளது. இதே உறுதியுடன் திமுக தொண்டர்கள் இணைந்து போராடுவோம்” என்றார்.