
சென்னை: தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கொண்டு வரப்பட்டது. 2012-ஆம் ஆண்டு அச் சட்டத்தில், ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது.