
சென்னை: சென்னையில் இருந்து 160 பேருடன் பெங்களூரு புறப்பட்ட விமானத்தில், திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.05 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக இரவு 7.50 மணிக்கு புறப்பட்டது. 160 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உட்பட 165 பேர் இருந்தனர்.
விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை கண்டுபிடித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.