
புதுடெல்லி: உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் தலைவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி.
இவர் சங்கராச்சாரியார்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர் துறவிகள் சார்பில், புதிதாக ஓர் அரசியல் கட்சி தொடங்க உள்ளார். இக்கட்சி சார்பில் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். இதற்கு முன்பாக பிஹாரின் மதுபனியிலிருந்து இவர் யாத்திரை தொடங்கியுள்ளார்.