
நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது தீபாவளி. தீபாவளி வருகிறது என்றவுடன் எல்லோரும் மனத்தில் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கிவிடும். அதே சமயம், சிலருக்குக் கவலையும் வந்துவிடும். ஏன், கவலை?
தீபாவளிக்குப் புதுத் துணிமணிகள் வாங்க, பட்டாசுகள் வாங்க, இனிப்புகள் வாங்க என பல விதமான செலவுகளை செய்ய வேண்டும். இந்த செலவுக்கான பணத்துக்கு என்ன செய்வது என்பதுதான் பலருக்குமான கவலை.
இப்போதைக்குப் பலரும் செய்வது, தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வரும் சம்பளத்தில் கணிசமான பகுதியை எடுத்து துணிமணிகள் வாங்க, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க என்று செலவு செய்கிறோம்.
முன்பு போல போனஸ் என்பது பல நிறுவனங்களில் இப்போது தரப்படுவதில்லை. எனவே, சம்பளத்தில் இருந்துதான் தீபாவளிக்கான பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு தீபாவளியையும் ஜாம் ஜாம் என்று கொண்டாட சூப்பர் ஐடியா இதோ…
நம்மில் பலரும் ‘தீபாவளி ஃபண்டு’ என்று கேள்விப்பட்டிருப்போம். தீபாவளி நேரத்தில் பட்டாசு வாங்க, இனிப்பு வகைகளை வாங்க இந்த தீபாவளி ஃபண்டுகளைத் தொடங்குவோம். இன்றைக்குப் பலரும் இப்படி ஃபண்டு ஆரம்பிப்பதை விட்டுவிட்டோம். என்றாலும், இந்த தீபாவளி ஃபண்டை மீண்டும் ஆரம்பித்து, ஒவ்வொரு தீபாவளியையும் ஜாம் ஜாம் என்று கொண்டாடலாம். எப்படி?

உங்களுடைய அடுத்த தீபாவளியை ஜாம் ஜாம் என்று கொண்டாட உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று முதலில் முடிவெடுங்கள். உதாரணமாக, தீபாவளிக்கான துணிமணிகள் வாங்க, பட்டாசு, ஸ்வீட்களை வாங்க ரூ.12,000 தேவை எனில், மாதந்தோறும் ரூ.1000-யை சேர்க்கத் தொடங்குங்கள். இல்லை, எனக்கு ரூ.18,000 தேவை என்கிறவர்கள் மாதந்தோறும் ரூ.1,500 சேர்க்கத் தொடங்குங்கள்.
மாதந்தோறும் இப்படி சேர்க்கும் பணத்தை வங்கி ஆர்.டி.யில் சேர்ப்பதைவிட சிம்பிளான வழி, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேர்ப்பது. மியூச்சுவல் ஃபண்டில் இப்படி சேர்க்கும் பணமானது கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் சேர்ப்பதால், பணத்துக்குப் பாதுகாப்பு; 7% – 8% கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

தீபாவளியை எந்தக் கவலையும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்கிறவர்கள் இன்றைக்கே இப்போதே தீபாவளி ஃபண்டைத் தொடங்கலாம்.
இது தொடர்பாக வழிகாட்டுதல் வேண்டும் என்கிறவர்கள் 960002-96001 என்கிற போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். அல்லது, 7708827174 (சபரி), 9500777894 (லட்சுமி), 9600004379 (குமார்) என்கிற எண்களுக்கு போன் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்!