
பரேலி: உ.பி பரேலியில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிக் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீடு உத்தர பிரதேசம் பரேலியில் உள்ளது. இங்கு கடந்த 12-ம் தேதி மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கோல்டி பிரார் மற்றும் ரோஹித் கோதாரா கும்பலைச் சேர்ந்த ரவீந்திரா, அருண் என தெரியவந்தது.